SOORI: பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் நேற்று முன்தினம் (மே 16) திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்’. ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகர் சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது சூரியிடம், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அழைத்தால் பிரசாரத்திற்கு செல்வீர்களா?” என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சூரி, “அண்ணன் சரியாக போய் கொண்டிருக்கிறார். ஆனால் எனக்கு நிறைய பட வேலைகள் இருக்கிறது” என்றார்.