“கருணாநிதி, ஜெயலலிதாவைவிட விஜய் பெரிய தலைவரா?” – சீமான் ஆவேசம்

0
47

NTK vs TVK: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா, கருணாநிதி இருந்த காலத்தில் கட்சி தொடங்கியவன் நான். ஜெயலலிதா, கருணாநிதியை விட விஜய் பெரிய தலைவரா?.

அவர்கள் கூட்டாத கூட்டத்தையாக விஜய் கூட்டிவிட்டார். கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என விஜய் பெயர் வைத்தது ஏன்? அகில இந்திய வெற்றிக் கழகம் என வைக்க வேண்டியதுதானே?. விஜய்யால் எனது வாக்கு வங்கி பாதிக்கும் என கார்த்திக் சிதம்பரம் கூறி இருக்கிறார்.

நான் கார்த்திக் சிதம்பரத்தை போட்டிக்கு அழைக்கிறேன். ஒரே தொகுதியில் போட்டியிடுவோம். ஒரு ரூபாய் கொடுக்காமல் யார் வெற்றி பெறுகிறார் என்பதை பார்ப்போம். கூட்டணி கண்டிப்பாக வைக்க கூடாது.

நான் தனித்து போட்டியிட்டு ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்று உள்ளேன். இன்னும் ஓராண்டு தான் இருக்கிறது. 2026ம் ஆண்டு தேர்தல் முடிவில் நான் யார் என்று தெரியும். பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்கள் தேடியவர்கள் அல்ல என்னை விரும்பிய மக்கள். என்னை பின்தொடரும் மக்கள் அனைவரும் போராட்ட களத்தில் தலைவரை தேடுபவா்கள் ஆவார்.

நன்றி: பாலிமர்

எனது கட்சியில் இருந்து பிற கட்சியில் சேர்ந்தவர்கள் என கூறுவோர், அவர்களிடம் உள்ள நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அட்டையை காட்டவும். நாங்கள் Decent Politician இல்லை ‘Deep Politician’ மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி நாம் தமிழர் தான். நாங்கள் Underground வேலை செய்து வருகிறோம். நான் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கமாட்டேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here