உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செப்.28ஆம் தேதி மதியம் 3:30 மணிக்கு செந்தில் பாலாஜி உட்பட நான்கு பேர் புதிய அமைச்சர்களாகப் பதவேற்றனர். தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று முக்கிய அமைச்சர்களும். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நடிகர் வடிவேலு மதுரையில் நேரில் சந்தித்துள்ளார்.
தொடர்ந்து, உதயநிதிக்கு பூங்கொத்து கொடுத்து நடிகர் வடிவேலு வாழ்த்து தெரிவித்தார். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை சென்ற துணை முதலமைச்சர் உதயநிதியை வடிவேலு சந்தித்துள்ளார்.