தவெக மாநாடு நடப்பதில் சிக்கல்?.. தொண்டர்கள் வேதனை

0
79

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற அக்டோபர் 27ஆம் தேதி மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் 50 அடியில் அகலமும், 200 அடியில் நீளத்திற்கும் மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க 27 குழுக்களை தவெக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அமைத்தார். குறிப்பாக சட்டம், போக்குவரத்தை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டிருந்தது. மேலும், 234 தொகுதிகளுக்கும், தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடலில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் மாநாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் நாளை (அக்.16) மற்றும் நாளை மறுநாள் (அக்.17) விழுப்புரம் மாவட்டத்தில் அதிகன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாநாட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வருகிற அக்டோபர் 27ஆம் தேதிக்குள் மாநாட்டிற்கான பணிகளை முழுவதுமாக முடிக்க முடியுமா என்கிற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஆகையால், மாநாட்டுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் மழையால் மாநாட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தனால், தவெக கட்சியினர் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here