Ratan Naval Tata: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டு உள்ளதாக, எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

86 வயதான தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வயது மற்றும் தொடர்புடைய மருத்துவ நிலைமைகளின் காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போதும் தீவிர சிகிச்சை பிரிவில் மோசமான உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது, ஆனால் இதை ரத்தன் டாடாவே தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்திருந்தார்.

புதன்கிழமை அவரது நிலை குறித்த அப்டேட்கள் குறித்து டாடா குழுத்திடம் கேள்வி கேட்டப்போதும், டாடாவின் பிரதிநிதி உடனடியாக பதிலளிக்கவில்லை. திங்களன்று ரத்தன் டாடா வெளியிட்ட தனது பதிவில் தான் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், மக்களும் நல விரும்பிகளும் கவலைப்பட எந்த காரணமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்திய தொழில் உலகின் முன்னோடியாகத் திகழும் ரத்தன் டாடா, தனது 86 வயதிலும் தொழில்துறையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். டாடா குழுமத்தை உலகளாவிய அளவில் அடையாளம் காட்டியவர் ரத்தன் டாடா, இவர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் செய்யும் முதலீடுகள் தான் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.