Ratan Tata Passed Away: இந்தியாவில் உள்ள பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா. இவருக்கு வயது 86. இந்த நிலையில் ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

இதற்கு முன்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலுக்கு ரத்தன் டாடா மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும், இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் வயது மூப்புகாரணமாக அவர் நேற்று (அக்.9) நள்ளிரவு காலமானார். ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டாடா குழும தலைவராக உருவெடுத்த ரத்தன் டாடா டாடா குழுமத்தில் பணியாற்றிய ரத்தன் டாடா பல ஆண்டு அயராத உழைப்பிற்கு பிறகே உயர் பதவியை ஏற்றார். சுண்ணாம்புக்கல் எடுப்பது தொடங்கி சூளைகளை கையாளுவது போன்ற பணிகளை ரத்தன் டாடா செய்தார்.
1991ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றார். அதன் பின் நிறுவனம் அசுர வளர்ச்சியை அடைந்தது. ரத்தன் டாடாவின் தலைமையின் கிழ் 50 மடங்கு லாபத்தை பெருக்கியது டாடா குழுமம். 1991ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை ரத்தன் டாடா பதவி வகித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டில் டாடா குழுமத்தலைவர் பதவியில் இருந்து ரத்தன் டாடா ஓய்வு பெற்றார். வாகனம், ஐ.டி, இரும்பு, தொழில்துறை என பலற்றிலும் டாடா நிறுவனம் முத்திரை பதிக்க ரத்தன் டாடா பங்காற்றினார். நடுத்தர மக்களின் வாகனக்கனவை நனவாக்க டாடா நானோ காரை அறிமுகம் செய்தவர் ரத்தன் டாடா.
நாட்டின் முன்னணி தொழிலதிபரான ரத்தன் டாடா தன்னம்பிக்கையால் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர். தன்னம்பிக்கை, உழைப்பு, அறிவு, தொழில் திறன், அர சிந்தனைக்காக அறியப்பட்டவர் ரத்தன் டாடா. தொழிலதிபர் ரத்தன் டாடா கொரோனா நிவார்ண பணிகளுக்காக ரூ.1,500 கோடி வழங்கினார்.

தற்போது அவரது மறைவு நாட்டின் மிக முக்கியமான இழப்பாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, அவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.