BROTHER: ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள `ப்ரதர்’ திரைப்படத்தை காமெடி திரைப்படங்களுக்கு பெயர்போன ராஜேஷ் இயக்கியிருக்கிறார். பூமிகா, ப்ரியங்கா மோகன், நட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்கியிருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (அக்.28) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விடிவி கணேஷ், ” ப்ரதர் திரைப்படம் ஒரு பேமிலி டிராமா. இயக்குநர் ராஜேஷ் காமெடி லவ் திரைப்படங்கள்தான் பண்ணியிருக்காரு.
இந்த குடும்ப படத்தை எப்படி பண்ணப்போறார்னு நினைச்சேன். அதன் பிறகு படத்தோட லைன் சொன்னார். இதுக்கு முன்னாடி நல்ல படங்கள் அவர் கொடுத்ததுனால எனக்கு நம்பிக்கை இருந்தது. அதுபோலதான் தயாரிப்பாளரும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து பண்ணுகிறவர்.

அடுத்ததாக என்னுடைய ஃபேவரைட் ஹீரோ ஜெயம் ரவி. நடிப்பை தாண்டி அவர்கிட்ட டைரக்ஷனுக்கான அறிவும் இருக்கு. படப்பிடிப்பு தளத்துல இதை பண்ணுங்க, அதை பண்ணுங்கனு சொல்வார். சிம்புகிட்ட இருக்கிற அதே விஷயத்தை இவர்கிட்டையும் பார்த்தேன்.
பூமிகா மேடமிற்கு இந்தி, இங்கிலீஷ்தான் தெரியும். தமிழ் சினிமாவைவிட்டு போய் 10 வருடம் ஆகிடுச்சு. அவங்களோட கதாபாத்திரமும் இந்த படத்துல ரொம்பவே நல்லா இருக்கும். இந்த படத்தோட தயாரிப்பாளரேதான் ரிலீஸும் பண்றாரு.
இந்த படம் பார்த்து நம்பிக்கை வந்து நாமே ரிலீஸ் பண்ணுவோம்னு அவர் இதை பண்றாரு. ப்ரியங்கா மோகன் ரொம்பவே நல்லா நடிச்சிருக்காங்க. அவங்க நடிக்கிற திரைப்படம் 99% கண்டிப்பாக ஹிட் அடிக்கும்னு ஒரு பெயர் எடுத்துட்டாங்க.

இப்போ ஹைதராபாத்ல ஒரு ஷூட்டிங்ல இருக்காங்க. கெமிஸ்ட்ரியெல்லாம் பழைய வார்த்தை . அதையெல்லாம் மீறி ஏதோவொரு விஷயம் ப்ரியங்கா மோகனுக்கும் ஜெயம் ரவிக்கும் இருக்கு” என்றார்.