“விஜய் தான் என்னுடைய க்ரஷ்” – நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்

0
73

அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடு லோஹர். இவர் கடந்த 2021ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான ‘முகில்பேட்டை’ என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, 2022ம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த ‘அல்லூரி’ மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

இதன்பின்னர் ஒரு மராத்தி மற்றும் மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 21ம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பிலும் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் தான் ‘டிராகன்’. டிராகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் சமூக வலைதளங்களில் அதிகம் தேடும் நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது கயாடு, ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் தெலுங்கு பட இயக்குனர் கே.வி.அனுதீப்பின் ‘பங்கி’ படத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு மேலும் பட வாய்ப்புகள் குறைந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த செலிபிரிட்டி க்ரஷ் குறித்து வெளிப்படுத்தியுள்ளார் நடிகை கயாடு. சேலம் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை கயாடு லோஹர் பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் பேசிய நடிகை கயாடு லோஹர், தனக்கு பிடித்த செலிபிரிட்டி க்ரஷ் விஜய்தான் என்று கூறியுள்ளார். மேலும் விஜய் நடித்த ‘தெறி’ தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு உங்களுடைய அறிவுரை என ஒரு மாணவி கேட்க, அதற்கு பதிலளித்த அவர், “எல்லாரும் நம்மை நாமே முதலில் நம்ப வேண்டும். நான் என்னை நம்பியதால் தான் இங்கு நிற்கிறேன். நல்ல எண்ணத்தோடு முன்னேறுங்கள். அது உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here