ராபர்ட் மாஸ்டருடன் வனிதாவுக்கு 4வது திருமணமா? தேதியுடன் வெளியான புகைப்படம்

0
67

Vanitha Vijayakumar: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் இளம் வயதிலேயே நடிக்க தொடங்கிவிட்டார். அவரது மகள் ஜோவிகாவும் பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார்.

பிக்பாஸ் பிறகு வனிதா புதிய தொழில்கள் தொடங்கி பிஸியாக இருந்தாலும் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் குக் வித் கோமாளி மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை குறித்து பேசியிருந்தார்.

அதோடு சொந்த விஷயங்கள் பற்றி பேசிய அவர், “தாக்குபவர்களை செருப்பால் அல்ல எதைக்கொண்டு வேண்டுமானாலும் அடிப்பேன்” என கோபமாக பேசியது ரசிகர்களிடம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. வனிதா இதுவரை 3 திருமணங்கள் செய்துள்ளார். ஆனால், அந்த 3 கல்யாணமும் பிரிவில் முடிந்துள்ளது.

அதோடு நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களது காதல் நீடிக்கவில்லை எனவும் ஒரு பேச்சு உள்ளது. இந்த நிலையில் வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டரின் கையை பிடித்துக்கொண்டு கீழே உட்கார்ந்து காதலை வெளிப்படுத்தும் காட்சி போல ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த பதிவில், ‘அக்டோபர் 5ஆம் தேதி’ என குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் இவர்களுக்கு கல்யாணமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது பட தகவலோ அல்லது பாடல் காட்சியின் புகைப்படமாக கூட இருக்கும், புரொமோஷன் வேலையாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here