விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் ஆகியோர் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடிக்கும் திரைப்படம் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’. இந்த படத்தில் அதுல்யா ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் நடிகர்களின் கதாப்பாத்திரத்தை குறித்து படக்குழு போஸ்டர் ஒவ்வொன்றாக அப்டேட் கொடுத்தனர். படத்தின் சில பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரம் நிறைந்த ஒரு கொள்ளை கூட்டத்துடன், ஒரு வங்கியை கொள்ளயடிக்க திட்டமிடுகின்றனர்.
இது தொடர்பான காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளன. திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது. டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் படக்குழு அறிவிக்க உள்ளது.