அப்பாவாக போகும் சன் டிவி பிரபலம்..! புகைப்படங்களை வெளியிட்ட தம்பதி..!

0
65

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் அஸ்வின் கார்த்திக். அடுத்தடுத்து விஜய் டிவி, சன் டிவியில் ஒளிபரப்பான குல தெய்வம், அரண்மனை கிளி, மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.

அந்த வகையில் சன் டிவி தொடரான ‘வானத்து போல’ சீரியலில் நடிக்க ஆரம்பத்தில் இவரது கதாபாத்திரத்திரம் எதிர்மறையாக காட்டப்பட்டாலும் பின்னர் அவரது கதாபாத்திரம் பாசிட்டிவாக மாறியது. கார்த்திக் இந்த சீரியலின் ஹீரோவாகவும் பின்னர் மாறிவிட்டார்.

மேலும், இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக கூடிய விரைவில் ஒரு சீரியலில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஸ்வின் கார்த்தி கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பிரபலங்களுக்கு மேக் அப் ஆர்டிஸ்ட்டாக இருந்த காயத்ரி என்பவரை காதலித்து வந்தார். தொடர்ந்து, கடந்த ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் காயத்ரியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து தற்போது காயத்ரி 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். முதல் முறையாக 5 மாத வளையல் பூட்டு பூ முடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த சந்தோஷமான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here