Game Changer: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, நாசர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.
தில் ராஜூ தயாரித்துள்ள இந்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் ‘ஜரகண்டி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது.
இந்த நிலையில் படத்தின் அடுத்த பாடலான `ரா மச்சா மச்சா ரா’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகை கியாரா அத்வானியின் போஸ்டரை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.