Bigg Boss 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8, கடந்த அக்.6ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கமல்ஹாசன் இடத்தை விஜய் சேதுபதி நிரப்புவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் ஷோவிலேயே பிக் பாஸ் தொகுப்பாளராக கலக்கி விட்டார்.
தொடர்ந்து, போட்டியாளர்களுக்கு இடையே பல தகராறுகள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்றைய ப்ரோமோவிலும் போட்டியாளர்கள் வாய்த்தகராறில் ஈடுபடுவதுபோன்று வெளியாகியுள்ளது. ந்த வார எலிமினேஷனுக்கு பிக் பாஸ் வீடு தயாராகி வருகிறது.

இதில் சௌந்தர்யா மற்றும் ரஞ்சித்தின் பெயரையே பலரும் உச்சரிக்கிறார்கள். சௌந்தர்யா எதுவும் செய்யாமல் வெளிநபர் போல் இருப்பதாகவும் ரஞ்சித் மிகவும் சேஃபாக விளையாடுவதாகவும் சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல் ரவீந்தர் மற்றும் ஜாக்குலின் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே இந்த வார எலிமினேஷனில் ரஞ்சித், சௌந்தர்யா, ரவீந்தரின் பெயர் முன்னிலையில் இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், சக போட்டியாளர்களிடம் நடிகை சௌந்தர்யா பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, தனக்குப் பேச தெரியாது என்றும் லூசு மாதிரி பேச முடியாது என்பது போல கூறியுள்ளார்.
இதனால், கடுப்பான நடிகர் அர்னவ் மற்றும் சுனிதா ஆகியோர் சௌந்தர்யாவிடம் கேள்விகளை முன்வைக்கின்றனர். மேலும், சௌந்தர்யாவைப் பார்த்து, “உனக்கு பேச தெரியாதா?” என சுனிதா கேட்கிறார். அத்துடன் ப்ரோமோ முடிவடைந்துள்ளது.