Bigg Boss 8: நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 8 பிரமாண்டமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்று விஜய் சேதுபதி அவரது ஸ்டைலில் கூற இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கியது.

7 சீசன்கள் கமல்ஹாசன் தொகுத்து வழங்க அந்த இடத்திற்கு வந்திருக்கும் விஜய் சேதுபதி 8 ஆவது சீசனை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்பதை காண மக்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அவர் முதல் நிகழ்ச்சியிலேயே செம ஸ்கோர் செய்துள்ளார் என்பது நன்றாக தெரிகிறது.
இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள்ளேயே முதல் போட்டியாளராக சச்சனா வெளியேற்றப்பட்டார். ஆனால், என்ன காரணம் என சரியாக தெரியவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் 8 ஆவது சீசனின் முதல் வார நாமினேஷன் லிஸ்ட் வந்துள்ளது. நாமினேஷன் லிஸ்டில் ஜாக்குலின், பேட்மேன் ரவி, அருண், முத்துகுமரன், சௌந்தர்யா மற்றும் ரஞ்சித் இடம்பெற்றுள்ளனர்.