AMARAN: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , சாய் பல்லவி நடித்துள்ள படம் அமரன், அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி அன்று ரிலீஸானது. ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்தன் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர்களுடன் புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷ்யாம் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மையான சம்பவத்தை அடிப்படையான கதையில் முழு ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இதன் காரணமாகவும், இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது, கடந்த அக்.18ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்நிலையில், சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த டிரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் அவர்களை திருப்தியடைய செய்துள்ளது.

இந்த டிரைலர், ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் நேற்று (அக்டோபர் 31ஆம் தேதி) தீபாவளி கொண்டாட்டடமாக திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது, இந்தப் படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அமரன் படம் நேற்று மட்டும் உலகம் முழுவதும் ரூ.21 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதில், தமிழ் நாட்டில் மட்டும் ரூ.15 கோடி ஆகும். இது சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ படம் முதல் நாளில் வசூல் செய்ததை விட அதிகமாகும். இந்தியன் 2 முதல் நாளில் ரூ.13 கோடி வசூலித்தது.

இந்த ஆண்டு இதுவரை, விஜய்யின் ‘தி கோட்’ மற்றும் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ ஆகிய படங்கள் மட்டுமே நல்ல தொடக்கத்தை பெற்றிருந்தநிலையில், தற்போது ‘அமரன்’ ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்து சிவகார்த்திகேயன் கெரியரில் சிறப்பான தொடக்கத்தை பெற்ற படமாக அமைந்துள்ளது.