AK 64: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது படத்திலும் நடித்து வருகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. அநேகமாக குட் பேட் அக்லி படம் பொங்கல் பண்டிகைக்கும் விடாமுயற்சி திரைப்படம் ஏப்ரல் மாதத்தை முன்னிட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு படங்களையும் முடித்த உடன் அஜித் அடுத்ததாக சிவா இயக்கத்தில் தனது 64ஆவது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜித்தை வைத்து சிவா நான்கு படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது ஐந்தாவது முறையாக மீண்டும் அஜித்துடன் இணைந்து இயக்க இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், விரைவில் இப்படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் சிவா இயக்கத்தில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா மற்றும் அஜித் கூட்டணியில் வெளியான வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அனைத்து படங்களின் டைட்டிலும் V என்ற எழுத்தில் தொடங்கியது. இதே போலவே இந்த படமும் V என தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ‘வெறித்தனம்’ என டைட்டில் வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.