GOOD BAD UGLY: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

ஏனென்றால், அஜித்தின் மற்றொரு படமான ‘விடாமுயற்சி’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதனால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது. குட் பேட் அக்லி படத்திலிருந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக தற்போது பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கான டப்பிங் பணியை நடிகர் அஜித்குமார் நிறைவு செய்துள்ளார். டப்பிங் பணி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.