சின்னத்திரை நயன்தாரா-வின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0
43

Vani Bhojan: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமான இவர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான “ஓ மை கடவுளே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின், படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சிறந்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து அதிக ரசிகர்களையும் சம்பாதித்து உள்ளார்.

தற்போது, இவர் கைவசம் பகைவருக்கு அருள்வாய், கேசினோ ஆகிய படங்கள் உள்ளன. ஹோஸ்டராக ரூ.2500 ரூபாய் சம்பளத்தில் வாழ்ந்த வாணி போஜன். தற்போது தமிழ் சினிமாவில் 50 லட்சம் வரை சம்பளம் வாங்க கூடிய நடிகையாக வலம் வருகிறார்.

சொத்து மதிப்பு இந்நிலையில், இவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ரூ 7 கோடி வரை வாணி போஜனுக்கு சொத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு ஊட்டியில் சொந்தமாக வீடுகள் உள்ள நிலையில், சென்னையிலும் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அதேபோல் 2 சொகுசு கார்களையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here