‘விடுதலை 2’.. ஷூட்டிங் புகைப்படங்களை பதிவிட்ட நடிகை மஞ்சு வாரியர்

0
51

MANJU WARRIER: வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. விடுதலை 2 படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை 2’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. முழுக்க முழுக்க அரசியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இதில் நடிகை மஞ்சு வாரியர் வரும் காட்சிகள் மட்டுமே ரசிகர்களுக்கு இதமாக இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. ‘விடுதலை 2’ படத்தில் மிகவும் முற்போக்கான கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டா பக்கத்தில் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்து, ” மகாலட்சுமி கதாபாத்திரத்தை வழங்கியதற்கு நன்றி வெற்றிமாறன் சார். தற்போது திரையரங்குகளில் விடுதலை 2″ எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here