RAVI MOHAN: இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின், நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ திரைப்படம். இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்தார் படத்தில் இடம் பெற்ற பாடலகள் அனைத்தும் ஹிட்டானது. கணவனை பிரிந்து மகனை வளர்க்கும் தாயின் அன்பு, அவள் படும் கஷ்டங்கள், தாய்க்காக மகன் செய்யும் செயல்கள் என மிகவும் நேர்த்தியாக இப்படத்தின் கதைக்களம் உருவாகியிருக்கும்.
குறிப்பாக ரவி மோகன் மற்றும் நதியாவின் காம்பினேஷன் மிக அழகாக வொர்க் அவுட் ஆகியிருக்கும். இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படத்தை மீண்டும் வரும் 14ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர்.

இதனால் ரவி மோகன் ரசிகர்கள் மற்றும் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் ரீ-ரிலீஸாவதையொட்டி இயக்குனர் மோகன் ராஜா தனது எக்ஸ் தளத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளார்.