இயக்குநர் ஷங்கர் தற்போது நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி வெளியாக உள்ளது. அதற்கான புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கருடன் இணைந்து பணியாற்றியதை பற்றி ராம் சரண் பேசியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில், ஷங்கர் சாரை ‘நண்பன்’ படத்தின் ரீமேக்கான “3 இடியட்ஸ்” படத்தின் நிகழ்ச்சியில் சந்தித்ததை சரண் நினைவு கூர்ந்தார். நான் ஷங்கர் சாரின் அருகில் அமர்ந்திருந்தேன், ‘என்னையோ, என் அப்பாவையோ அல்லது என் சமகால ஹீரோக்களை வைத்து அவரை தெலுங்குப் படம் பண்ண சொல்ல வேண்டும் என்று யோசித்தேன். ஆனால் அவரிடம் சொல்லும் தைரியம் எனக்கு இல்லை,” என்றார்.
மேலும், “ஆர்.ஆர்.ஆர்” படத்தின் போது, ஷங்கர் இயக்கும் ஒரு படத்தின் பாகமாக நடிக்க தயாரிப்பாளர் தில் ராஜு அணுகினார். அதை நான் எதிர்பார்க்கவில்லை. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் ஷங்கர் இருவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெரிய பாக்கியம்.

அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இவர்கள் இருவரும் ‘டாஸ்க் மாஸ்டர்கள்’. அவர்களால் முடிந்த அளவு சிறப்பானதையே செய்ய விரும்புவார்கள்” என கூறியுள்ளார்.