BIGG BOSS 8 : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 10ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இதில், இந்த வாரத்தின் தலைவராக ரஞ்சித் தேர்ந்து எடுக்கப்பட்டார். தொடர்ந்து, இந்த வார பிக் பாஸ்-ல் ரஞ்சித், அன்ஷிதா, அருண் பிரசாத், ராணவ், பவித்ரா, ரயான், சத்யா ஆகியோர் பணியாளர்களாக விளையாடுகின்றனர்.

மேலும், தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், செளந்தர்யா, மஞ்சரி, ஜெஃப்ரி, தர்ஷிகா, வி.ஜே. விஷால் ஆகியோர் ஆலை மேலாளர்களாகவும் அதிகாரிகளாகவும் விளையாடுகின்றனர். இந்த டாஸ்க்கிற்கு வெளியாகியுள்ள 3 முன்னோட்ட விடியோக்களில் இரண்டு விடியோக்களில் முத்துக்குமரனை மையமாக வைத்து வெளியாகியுள்ளது.

கடந்த இரு வாரங்களாக முத்துக்குமரனின் விளையாட்டு தனியாகத் தெரியவில்லை என்றும், குழுவாக விளையாடும்போது மட்டுமே முத்துக்குமரன் தெரிவதாகவும் கருத்துகள் நிலவியது. பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய சாச்சனா, இதனைக் குறிப்பிட்டு முத்துவிடம் பேசிவிட்டுச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து, சாச்சனாவின் வார்த்தைகளை உணர்ந்த முத்துக்குமரன் தனது ஆட்டத்தை பலப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் பலர் முன்னோட்ட விடியோக்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.