பிக் பாஸ் 8.. ஜாக்குலினை அழவைத்த ஆண்கள்.. கொந்தளித்த பெண்கள்..

0
88

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் அக்டோபர் 15 ஆம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஆண்கள் வீட்டிற்குள் நுழைந்த ஜாக்குலினை தடுத்து நிறுத்தும் ஆண்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது அர்னவ் இந்த பார்டர் தாண்டி யாரும் வரக்கூடாது, வந்தா நடக்கிறதே வேற என்று மிரட்டுகிறார்.

பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆவது நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் வீடு பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்கு ஆண்கள் பெண்கள் எல்லாரும் சமம் என்று டாஸ்குகள் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்போது வெற்றி பெறப்போவது ஆண்களா? பெண்களா? என்ற கேள்விக்குறியோடு போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் சத்யா வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதை அடுத்து ஷாப்பிங் டாஸ்க் நடைபெற்றது. அப்போது அவர்களிடம் உள்ள பணத்திற்கு அதிகமாக ஆண்கள் ஷாப்பிங் செய்துள்ளனர். இதனால் மளிகை பொருட்கள் வழங்கப்படாது என்று பிக் பாஸ் அறிவித்துவிட்டார். அதோடு நான் பாவம் பார்த்து தரும் பொருட்களை வைத்துதான் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிக் பாஸ் கூறியது.

பெண்கள் சார்பாக ஆண்கள் அணியில் இருக்கும் தர்ஷா குப்தா, நீங்கள் செஞ்ச தப்புக்காக நானும் உங்களோடு சேர்ந்து சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படணுமா? என்று முதல் ப்ரோமோவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

அதுபோல பெண்கள் அணியினர் தாங்கள் டாஸ்கில் பெற்ற பணத்தை விட குறைவான தொகைக்கு பர்சேஸ் செய்ததால் அவர்களுக்கு மளிகை பொருள் வழங்கப்பட்டது. இதுபோல் கிச்சன் ஆண்கள் அணியின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அங்கு சென்று சமைக்கவோ அல்லது வேறு வேலைகளை செய்வதற்கோ ஆண்கள் அணியினரை கேட்டு விட்டு தான் பெண்கள் உள்ளே செல்ல வேண்டும்.

அப்படி அனுமதி கேட்கும் போது அவர்களுக்கு ஆண்கள் அணியினர் சில டாஸ்குகள் கொடுப்பது வழக்கம். கடந்த வாரம் பாட்டு பாட சொல்லியும், டான்ஸ் ஆட சொல்லியும் டாஸ்க் கொடுத்து வந்தனர். ஆனால் இப்போது அவர்கள் கொடுக்கும் டாஸ்க் தான் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

அதன்படி இன்று காலையில் வெளியான ப்ரோமோவில் ஆண்கள் அணியை சேர்ந்த முத்துக்குமாரன் பெண்கள் அணியில் இருந்து ஜாக்குலின் மற்றும் சாச்சிகா ஆகிய இருவரை மட்டும் தான் சமைக்க அனுப்புவோம்.

அப்படி அவர்கள் சமைப்பது என்றால் ஆண்கள் அணியினர்கள் சாப்பிட்ட பாத்திரங்களையும் அவர்கள் தான் கழுவ வேண்டும். இந்த டாஸ்க்குக்கு சம்மதித்தால் தான் சமைக்க அனுப்புவோம் என்று சொல்ல அதைக் கேட்டு பெண்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

இந்த ப்ரோமோ அதிகமான சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. அந்த ப்ரோமோவில் உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா என்று சாச்சிகா கண்ணீர் விட்டு அழுகிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் இப்படி பெண்களை கொடுமைப்படுத்தும் விதமாக ஆண் போட்டியாளர்கள் ஆண் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள்.

அதே நேரத்தில் இதற்கெல்லாம் காரணம் பிக் பாஸ் தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிக் பாஸ் தான் இவர்கள் இப்படி எல்லாம் சண்டை போட வேண்டும் என்பதற்காக டாஸ்க் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இது தெரியாமலேயே ரசிகர்கள் போட்டியாளர்களை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ஜாக்குலின் கிச்சனுக்குள் ஆண்களின் எதிர்ப்பையும் மீறி நுழைந்து போகிறார். அதை பார்க்கும் முத்துக்குமாரன் நீங்க யார்கிட்ட கேட்டு உள்ள வந்தீங்கே என்று கேட்க, அதற்கு ஜாக்குலின் நான் யாரையும் கேட்கல என்று சொல்கிறார்.

அதற்கு முத்துக்குமரன் கிச்சனுக்கு என்று இன்சார்ஜ் ஒருவர் இருக்கிறாரே அவரிடம் நீங்கள் கேட்டீங்களா? என்று கேட்க அதற்கு ஜாக்குலின் அவர் எங்க இருக்கிறாரோ அங்க போய் நான் கேட்கணுமா? அவர் பாத்ரூமில் இருந்தாலும் நான் அங்க போய் கேட்கணுமா? என்று வாக்குவாதத்தில் சவுந்தர்யா ஈடுபட்டார்.

அவர்தான் இங்கே இல்லை என்று தெரிகிறதே அப்போ எங்க இருந்து போகும்போது அவர் இன்னொருவரை நியமிச்சிட்டு போக வேண்டியது தானே நாங்க அப்போ அவரிடமே அனுமதி கேட்டு இருப்போமே என்று ஜாக்குலினுக்கு ஆதரவாக சண்டை போடுகிறார்.

அப்போது அர்னவ் இது எங்க வீடு. எங்க அனுமதி கேட்காமல் இந்த பார்டரை தாண்டி யாரும் உள்ள வரக்கூடாது, அப்படி வந்தால் நடக்கிறதே வேற என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here