மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். அவர் கடைசியாக லக்கி பாஸ்கர் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைந்து காந்தா என்ற படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இவர் ‘தி ஹண்ட் பார் வீரப்பன்’ மற்றும் நிலா திரைப்படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் ‘மிஸ்டர் பச்சன்’ திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், சமுத்திரக்கனியின் பிறந்தநாளையொட்டி “காந்தா” படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.