இஸ்லாமிய உடையில் இப்தார் நோன்பு திறந்த தவெக விஜய்

0
91

TVK VIJAY: ரமலான் மாதத்தையொட்டி, தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு தவெக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் மாலை 5 மணியளவில் வருகை தந்தார். விஜய்யை காண அதிக அளவில் பொதுமக்கள் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் குவிந்துள்ளனர். 6 மணியாளவில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு விஜய் வருகை தந்தார்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட சுமார் 3000- பேர் பங்கேற்று இருந்தனர். இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறந்த விஜய், தொழுகை மேற்கொண்டார். நோன்பு கஞ்சியையும் அருந்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய், மனிதநேயம் சகோதரத்துவத்தை பின்பற்றுவொம். மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பின்பற்றுவோம்” என்றார். நிகழ்ச்சி முடிந்து சென்ற போது விஜய், திறந்த வேனில் அங்கிருந்தவர்களை நோக்கி கை அசத்தபடி சென்றார்.

நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு தவெக சார்பில் மட்டன் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒய்.எம்.சி.ஏ-வில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி காரணமாக ராயப்பேட்டை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here