முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி கூறிய இளையராஜா

0
73

ILAIYARAJA: தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1976ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இவரது இசையில் வெளியான ”விடுதலை 2′ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது ‘வேலியன்ட்’ (Valiant) என்னும் தலைப்பில் தனது முதல் சிம்பொனியை இயற்றியிருக்கிறார். இது வருகிற 8-ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக அரங்கேற்றப்பட உள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று நினைவு பரிசு வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இசை நிகழ்ச்சியையொட்டி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ‘இசைஞானி’ இளையராஜா நன்றி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தங்கள் நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன! மிக்க நன்றி!” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here