விடாமுயற்சி டிரைலர் அப்டேட்.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்

0
48

VIDAAMUYARCHI: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ‘விடாமுயற்சி’ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பொங்கல் அன்று வெளியாகிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. டீசரில், ‘எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு’ என்ற வாசகம் இடம்பெற்றது.

இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. டீசர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வெளியாகி ஹிட்டடித்தது.

இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் படத்தின் டிரைலரை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here