AJITH FANS: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்து வருகிறார். இதல் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. முன்னதாக அஜித் நடித்த ‘வலிமை’ படம் குறித்த அப்டேட்கள் வெளியாகாமல் இருந்ததை அடுத்து, அஜித் ரசிகர்கள் கூட்டம் கூடிய இடங்களில் எல்லாம் வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தனர்.
அந்த வரிசையில், தற்போது அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் ‘கடவுளே – அஜித்தே’ என்று கூறி வருகின்றனர். சமீபத்தில் நடந்த தவெக மாநாட்டில் கூட ‘கடவுளே – அஜித்தே’ என கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மெட்ரோ ரயில் ஒன்றில் வெளிநாட்டவர் பயணம் செய்யும் கோச்-இல் உள்ள அனைவரும் “கடவுளே-அஜித்தே” என கூறி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனைப் பார்த்த வெளிநாட்டவர்களும் ‘கடவுளே – அஜித்தே’ என கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.