“பிளடி பெக்கர்”.. வெளியானது கவின் படத்தின் டீசர்

0
99

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் நெல்சன் திலிப்குமார். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளவில் 600 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு பிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார். நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார்.

இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளடி பெக்கர்’ . இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் அக்.7ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வெளியாகும் என அறிவித்திருந்தது. அதன்படி, இன்று (அக்.7) டீசர் வெளியாகியுள்ளது. டீசரைப் பார்த்த ரசிகர்கள் கவினின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here